ரூ. 9,800 கோடி செலவில் ஐ.நா தலைமையகம் சீரமைப்பு
நியூயார்க்: ஐ.நா தலைமைச் செயலகத்தை சுமார் 9,800 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கும் பணி விரைவில் துவங்கவிருக்கிறது. இப்பணி வரும் 2013ம் ஆண்டு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா அமைப்பின் தலைமை செயலகம் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. 1950ல் கட்டிமுடிக்கப்பட்ட இந்த 32 மாடி கட்டிடத்தை தற்போது ஐ.நா சீரமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான செலவு தொகை சுமார் 9,800 கோடி ரூபாய். இத்திட்டம் 2013ல் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தற்போது அங்கு இயங்கி வரும் அலுவலகங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. ஐ.நா.வின் பாதுகாப்பு செயலகம் மட்டும் அங்கு மறுசீரமைப்பு செய்யப்படாத பகுதி ஒன்றில் இயங்கும்.
சீரமைப்பு பணிகள் சுற்றுப்புற சூழ்நிலைகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் என தெரிகிறது.
இத்திட்டத்தின் செயல் இயக்குனர் மைக்கேல் அல்டர்ஸ்டைன் கூறுகையில், இத்திட்டத்தில் கட்டத்தில் இயற்கையில் கிடைக்கும் சூரிய சக்தியை அதிகம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் 44 சதவீத எரிபொருள் தேவை குறையும்.
சுவர்களில் ஒற்றை கண்ணாடி பதிக்கப்பட்ட திரைகளுக்கு பதிலாக இரண்டு அடுக்கு கொண்ட கண்ணாடி திரைகளை பதிக்கவிருக்கிறோம் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications