குவைத்-நாளை மீலாது சிறப்பு மாநாடு
குவைத்: குவைத்தில் நாளை மீலாது நபி சிறப்பு மாநாட்டு்க்கு நடத்த தமிழ் இஸ்லாமிய சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
குவைத் அப்ரக் கைத்தான் பகுதியில் உள்ள இந்தியன் கம்யூனிட்டி பள்ளியில் நாளை (6ம் தேதி) மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை தமிழ் இஸ்லாமிய சங்கம் சார்பில் மாபெரும் ஸீரத் (மீலா)துன் நபி விழா நடைபெற உள்ளது.
தமிழத்திலிருந்து சிறப்பு விருந்தினர் அய்யம்பேட்டை பி.எம். ஜியாவுத்தீன் அஹ்மத் பாகவீ கலந்து கொண்டு விழா பேருரையாற்ற இருக்கிறார்.
குவைத்தில் வசிக்கும் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்/ ஆலிம்களும் உரையாற்றுகின்றனர். இதையொட்டி நாளை நடக்கவிருக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள்:
குழந்தைகள் நிகழ்ச்சி: 1
அ. 7 வயது வரை - இஸ்லாமியப் பொது அறிவுப் போட்டி (குயிஸ்)
ஆ. 8 முதல் 11 வயது வரை - இஸ்லாமியப் பொது அறிவுப் போட்டி (குயிஸ்)
இ. 12 முதல் 16 வயது வரை - தொழுகையில் ஓதப்படும் துஆக்கள் மற்றும் வழமையான சிறப்பு பிரார்த்தனைகள்
குழந்தைகள் நிகழ்ச்சி: 2
அ. 7 வயது வரை - திருக்குர்ஆனின் கடைசி பத்து சூராக்கள்
ஆ. 8 முதல் 11 வயது வரை - திருக்குர்ஆனின் கடைசி இருபது சூராக்கள்
இ. 12 முதல் 16 வயது வரை - பேச்சுப் போட்டி (கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் மட்டும் உரையாற்ற வேண்டும்)
1. திருக்குர்ஆனின் சிறப்புகள்
2. பெற்றோரின் சிறப்புகள்
3. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்குணங்கள்
பெண்கள் நிகழ்ச்சி:
இஸ்லாமியப் பொது அறிவுப் போட்டி (குயிஸ்)
மேற்கண்ட போட்டிகளில் ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்றும், காலை 9.30க்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு பரிசுகளும், கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இப்பெருவிழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சிற்றுண்டியும், பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விழா ஏற்பாட்டாளாகள் தெரிவிக்கின்றனர்.
விழாவில் குவைத் வாழ் இந்திய, தமிழக, இலங்கை தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்து கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், விழாக் குழுவினர் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை [email protected] / [email protected] ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும்,
உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும், அலைபேசி வாயிலாக (+965) 97872482, 99430786, 97302747 போன்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications