ராமேசுவரம் கம்பன் கழக ஆண்டுவிழா
ராமேசுவரம்: ராமேஸ்வரத்தில் உள்ள கம்பன் கழக ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
அங்குள்ள கோசுவாமி மண்டபத்தி்ல் இந்த விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தேறியது. புதுச்சேரி கம்பன் கழக துணைத் தலைவர் சிவக்கொழுந்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கம்பன் கழகச் செயலர் முருகேசன் தலைமை உரையாற்றினார்.
ராமேசுவரம் கம்பன் கழகத் தலைவர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். கம்பன் கழக ஒருங்கிணைப்பாளர் கோடூர் ரமணிசாஸ்திரி, புதுச்சேரி கம்பன் கழகப் பொருளாளர் வேல்சொக்கநாதன் வாழ்த்துரை வழங்கினர்.
கம்பனில் வள்ளுவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இலங்கை கம்பன் கழகப் பொறுப்பாளர் ஜெயராஜ் தலைமை வகித்தார்.
ராமேசுவரம் கம்பன் கழக இணைச் செயலர் பழனிச்சாமி வரவேற்றார். கருத்தரங்கில் இலங்கை பிரசாந்தன், இள. ராமசாமி, ராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சியில் ராமேசுவரம் திமுக நகர் செயலர் ஜான்பாய், இலங்கை பிரசாந்தனுக்கு விருது வழங்கினார்.
கம்பன் வழிகாட்டுதலில் பெரிதும் பயனடைவது என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இலங்கை ஜெயராஜ் நடுவராக இருந்தார். ராமேசுவரம் கம்பன் கழகப் பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications