கோடை-ஆனைமலை புலிகள் சரணாலயம் மூடல்!

பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலை புலிகள் வன சரணாலயத்தில் புலி, யானை, கரடி, சிங்கவால் குரங்கு, மான், காட்டுப்பன்றி உள்பட பல வன விலங்குகள் உள்ளது. பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை, அமராவதி, உடுமலை ஆகிய 6 வன சரகங்களை கொண்டது ஆனைமலை.
இந்த புலிகள் வன சரணாலயத்தில் டாப்சிலிப், ஆழியார், வால்பாறை உள்பட பல சுற்றுலா தலங்கள் உள்ளன. கோடை வெயில் காரணமாக இந்த வன சரணாலயம் கடந்த 1ம் தேதி முதல் மூடப்பட்டது. மேலும், சுற்றுலா பயணிகள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்பு பெய்த பரவலான மழையால் வனப்பகுதி கோடையை தாக்கு பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழையை தொடர்ந்து கோடை வெயிலும் அதிகமாக இருந்ததால் ஆனைமலை புலிகள் வன சரணாலயம் மீண்டும் 25 நாட்களுக்கு மூடப்பட்டது.
அதன்படி மார்ச் 20ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15ம் தேதி வரை சரணாலயத்தை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொள்ளாச்சி செல்லும் சுற்றுலா பயணிகள் புலிகள் வன சரலாயத்தைக் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications