தமிழக ஆளுனர் பர்னாலாவுக்கு அன்னை தெரசா விருது
சென்னை: வாழ்நாள் சாதனையாளருக்கான அன்னை தெரசா விருது இந்தாண்டு தமிழ்நாடு ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராஜ்பவன் செய்தி குறிப்பு ஒன்று கூறுகையில்,
அன்னை தெரசா சர்வதேச மற்றும் மில்லினியம் விருது கமிட்டி கடந்த 2000ம் ஆண்டிலிருந்து அன்னை தெரசா வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி வருகிறது.
இந்தாண்டு தமிழ்நாடு ஆளுனர் எஸ்எஸ் பர்னாலாவுக்கு, அவரது சமுதாயப் பணி மற்றும் நிர்வாக திறமை ஆகியவற்றை பாராட்டும் வகையில் வழங்கப்பட இருக்கிறது.
கொல்கத்தாவில் நடக்கும் இதற்கான விழாவில் மக்களை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி கலந்து கொண்டு இந்த விருதை வழங்குகிறார்.
பர்னாலா மாணவ பருவத்திலேயே விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவர். பஞ்சாப் முதல்வராக இருந்த போது, அம்மாநிலத்தலி கல்வி சீர்திருத்தத்தை கொண்டு வந்தார். அமிர்தசரசில் குருநானாக் பல்கலைக்கழகம் அமைய முக்கிய காரணமாக இருந்தார்.
பஞ்சாபில் தலைவிரித்தாடிய தீவிரவாதத்தை அழிப்பதில் பெரும் பங்காற்றினார். ஐநா, சார்க் மற்றும் பல சர்வதேச அமைப்புகளில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்துள்ளார். தற்போது தமிழக ஆளுனராக இருக்கும் இவர் இங்கு கல்வியின் தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்தி வருகிறார் என்கிறது அந்த குறிப்பு.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications