ஜன. 24ம் தேதி பெண் குழந்தைகள் தினம்: அரசு முடிவு
டெல்லி: பெருகி வரும் பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜனவரி 24ம் தேதியை, தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய மகளிர் மற்றும் சிறார் வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறுகையில், பெண் சிசுக் கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண் குழந்தைகளுக்கு சுகாதாரம், சத்துணவு, கல்வி, வேலைவாய்ப்பில் சமத்துவம் இல்லாத நிலை உள்ளது.
இதை குறைக்கவும், முற்றாக ஒழிக்கவும், பெண் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஆண்டு தோறும் ஜனவரி 24ம் தேதியை தேசிய பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்க அரசு தீர்மானித்துள்ளது.
மேலும், பெண் குழந்தைகளுக்கான எதிரான பாரபட்சத்தைப் போக்கும் பிரசாரத்தை ஜனவரி 19ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் திட்டங்கள் குறித்து இந்த பிரசாரத்தின்போது விளம்பரப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications