சென்னையில் ஈத்மிலன் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
சென்னை: சென்னையில் தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் சார்பில் ஈத்மிலன் எனும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை ஹோட்டல் இம்பீரியல் ஃபைஸ் மஹாலில் நடைபெறுகிறது.
கடந்த 18 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி நாளை காலை பத்து மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை நடைபெறும். நிகழ்விற்கு சென்னை-1 மியாஸி மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளி தாளாளர் பி.எஸ்.எம். அப்துல் காதர் தலைமை வகிக்கிறார்.
தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டி குலாம் முஹம்மது முன்னிலை வகிக்கிறார்.
டிரஸ்ட் செயலாளர் மவ்லவி எம். முஜிபுர் ரஹ்மான் உமரி இஸ்லாம் ஓர் அறிமுகம் குறித்து உரை நிகழ்த்துகிறார். சென்னை மந்தைவெளி ஈத்கா மஸ்ஜித் தலைமை இமாம் மவ்லவி கே.எம். இல்யாஸ் ரியாஜி இஸ்லாம் குறித்த ஐயங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்.
மாலை 6.50 க்கு நடைபெறும் நிகழ்விற்கு டி.எம். உமர் ஃபாரூக் தலைமை வகிக்கிறார். விடியல் வெள்ளி மாத இதழ் நிறுவனரும், வைகறை வெளிச்சம் இஸ்லாமிய மாத இதழ் ஆசிரியர் மு. குலாம் முஹம்மது இஸ்லாம் சந்திக்கும் சோதனைகள், சவால்கள், சாதனைகள் எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துகிறார்.
மவ்லவி கே.எம். இல்யாஸ் ரியாஜி முஸ்லிம்களின் பலமும் பலஹீனமும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்துகிறார். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு
தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட், 235 பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 600 014.
தொலைபேசி: 044 - 45566909
மின்னஞ்சல் : [email protected]
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications