ஈழத் தமிழர்களின் விடிவெள்ளி ஜெ.-டென்மார்க் தமிழ் அமைப்பு
வென்ட்போர்க்: தனி ஈழம் அமைப்பேன் என கூறிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழர்களின் விடிவெள்ளியாக திகழ்வதாக டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் பொன். மகேஸ்வரன், ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில்,
உலக வரைபடத்தில் ஒர் புதியநாடு. அதுவும் தமிழருக்கான தமிழீழம் என்ற உங்கள் திடசங்கற்பமான முடிவை நாங்கள் பாராட்டுகின்றோம். கோழைத்தனமும் கபடநாடகங்களும் நிறைந்த அரசியல் களத்தில் ஈழத்தமிழரைப் பகடைக்காய்களாக நகர்த்தி அரசியல் லாபம் தேடும் சுயநல மனிதர்கள் வாழும் இக் காலகட்டத்தில் துணிந்து நின்று கருமமாற்றறும் உங்கள் பணி தொடரட்டும.
தனிஒரு நபராகநின்று தமிழீழத்தை அமைத்துக் கொடுப்பேன் என்ற கூற்றை முதன்முதலில் உலகத்தி்ல் அங்கீகரித்து அறிமுகப்படுத்தி வைத்துள்ளீர்கள். நீங்கள் செயல்வீரர் மட்டுமல்ல நல்ல சிந்தனையாளரும், சொன்னதை நடத்திக்காட்டும் சாதனை படைத்தவர் என்பதையும் நாங்கள் நன்கு அறிவோம்.
எதிர்வரும் தேர்தல் களத்தில் நீங்கள் வெற்றிவாகை சூடி எங்கள் எதிர்கால வாழ்வை நாங்கள் ஈழத்தில் சென்றுவாழ வழியமைத்துக் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையின் சின்னமாகவும், ஈழத்தமிழரின் விடிவெள்ளியாகவும் தங்கள் நாங்கள வரவேற்கிறோம். உங்கள் பணி தொடரட்டும். மக்கள் சேவையே மகேசன் சேவை.
தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலில் தோன்றாமை நன்று
வாழ்த்துக்களுடன் டென்மார்க் வாழ் ஈழத்தமிழ் மக்கள் சார்பாக டென்மார்க் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications