வைகாசி விசாகம்-திருச்செந்தூருக்கு 100 சிறப்பு பேருந்து
திருச்செந்தூர்: வைகாசி விசாகத்தை முன்னிட்டு தென் மாவட்டங்களிலிருந்து திருச்செந்தூருக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூன் 5ம் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. இத் திருவிழாவுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கோயில் வாளகத்தில் நடந்தது. ஆர்டிஓ போஸ் தலைமை வகித்தார்.
இணை ஆணையர் பாஸ்கரன், டிஎஸ்பி சந்திரபால், அறங்காவலர் வக்கீல் சந்திரசேகரன், தங்கதுரை, தாசில்தார் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 100 சிறப்பு பஸ்கள் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஊர்களிலிருந்து இயக்கப்படும். 3 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கோயில் வாளகம், நகர பகுதிகளில் 15 இடங்களில் தண்ணீர் தொட்டி அமைப்பது, நகரில் அவ்வப்போது சேரும் குப்பைகளை அகற்ற 75 சுகாதார பணியாளர்களை ஈடுபடுத்துவது, தீயணைப்பு துறை சார்பில் 3 இடங்களில் தீயணைப்பு வண்டிகளை நிறுத்தி 64 பணியாளர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும், கடலில் பக்தர்கள் குளிப்பதற்கு பாதுகாப்பு வளையம் அமைப்பது, வைகாசி விசாக நாட்களில் 2 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்வது, சுகாதார துறை சார்பில் 24 மணி நேரம் மருத்துவ குழுவை தயார் நிலையில் வைப்பது, ஆறுமுகநேரி அடைக்கலபுரம் ரோட்டில் தனிக்குழு அமைப்பது, பாதுகாப்பு பணிக்காக கோயில் வாளகத்தில் 540 போலீசாரை ஈடுபடுத்தபடுவது என முடிவெடுக்கப்பட்டது.
சன்னதி தெருவில் போக்குவரத்து நெருக்கடி மற்றும் நகரில் போக்குவரத்து நெரிசல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்ப்டடது. இதை தொடர்ந்து வைகாசி விசாக நாளில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் ஆகியவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
-
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications