பிரபல எழுத்தாளர் கமலாதாஸ் மரணம்

Subscribe to Oneindia Tamil

Kamala Surayya
திருவனந்தபுரம்: பிரபல எழுத்தாளர் கமலாதாஸ் சுரையா புனேவில் உள்ள மருத்துவமனையில் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

ஆங்கிலம் மற்றும் தாய் மொழியான மலையாளத்தில் புலமை பெற்றவர் கமலாதாஸ்.

கேரளாவைச் சேர்ந்தவர் கமலாதாஸ். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இஸ்லாமுக்கு மதம் மாறினார். தனது பெயரா கமலா சுரையா என மாற்றிக் கொண்டார்.

75 வயதாகும் கமலாதாஸுக்கு சமீப காலமாக உடல் நலம் சரியில்லை. இதையடுத்து அவர் வசித்து வந்த புனேவில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மை ஸ்டோரி என்ற அவரது சுயசரிதை நூல் மிகவும் புகழ் பெற்றது. இது பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

எண்ணற்ற கவிதைகள், சிறுகதைகளையும் கமலாதாஸ் எழுதியுள்ளார்.

மலையாளத்தில் மாதவிக்குட்டி என்ற பெயரில், ஏராளமான சிறு கதைளை கமலாதாஸ் எழுதியுள்ளார்.

கமலாதாஸின் கவிதைகள், கதைகள் பல சர்ச்சைகளைக் கிளப்பியவை. காரணம், இந்தியப் பெண்களின் செக்ஸ் ஆசைகள் குறித்து இவரது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் வெளிப்படையாக வெளிப்படுத்தும். இதன் காரணமாக கமலாதாஸ் பெரும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார்.

இருந்தாலும் தன்னை நோக்கி பாய்ந்த விமர்சனங்களைப் புறம் தள்ளி விட்டு புரட்சிப் படைப்பாளியாகவே கடைசி வரை திகழ்ந்தவர் கமலா தாஸ்.

கமலாதாஸின் கணவர் மாதவ தாஸ் முன்பே இறந்து விட்டார். இந்த்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான நாலப்பாடு பிரபல பத்திரிக்கையாளர் ஆவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+