ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கில பயிற்சி
குமரி: தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களின் ஆங்கில புலமையை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சிலை சேர்ந்தவர்கள் மூலம் வரும் 9ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்து நான்காம் வகுப்பு வரை செயல்வழி கற்றல் முறையிலும், 5 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறையிலும், பாடம் கற்பிக்கப்படுகிறது.
மெட்ரிக் பள்ளி குழந்தைகளை போல் அரசு பள்ளி மாணவர்களுக்கு சாரளமாக ஆங்கிலம் பேசுவதற்கு அவர்களின் ஆங்கிலம் மொழி திறனை வளர்க்க முடிவெடுக்கப்பட்டது.
இதற்காக பிரிட்டிஷ் கவுன்சிலும், யுனிசெப் அமைப்பும், இணைந்து செயல்வழி கற்றல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கில புலமை, கேட்டல் திறன், பேச்சு திறன், வாசித்தல் போன்ற பயிற்சிகளை அளிக்க உள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களின் ஆசிரியர்களுக்கு கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியிலும், பயிற்சி வகுபபுகள் நடத்தப்படுகின்றன.
வரும் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை கன்னியாகுமரி விவேகனந்தா கேந்தராவில் 80 பேருக்கும், 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை நெல்லையில் 80 பேருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் கவுன்சிலை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு ஜூலையில் மற்ற ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் எனஅனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி தெரிவித்தார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications