ஷார்ஜா-என்ஆர்ஐ ஓட்டுரிமை கருத்தரங்கு
ஷார்ஜா: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும் என கோரி அமீரக இந்திய சகோதரத்துவ பேரவை என்ற அமைப்பு கருத்தரங்கம் ஒன்றை வரும் 12ம் தேதி நடத்துகிறது.
ஈராக், ஈரான், சிரியா, போர்ச்சுக்கல், பிலிப்பைன்ஸ் போன்ற சிறிய நாடுகள் கூட வெளிநாடுகளில் வாழும் தங்கள் குடிமக்களுக்கு ஓட்டுரிமை வழங்கியிருக்கின்றன. ஆனால் உலகிலேயே மிகப் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை இல்லை.
இந்த அவல நிலையைப் போக்கி வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஓட்டுரிமை பெற்றிட அமீரக இந்தியா சகோதரத்துவப் பேரவை பல கட்டங்களாகப் பிரச்சாரங்களை நடத்தவுள்ளது.
அதன் முதல் கட்டமாக நடக்கும் வரும் 12ம் தேதி மாலை 7.40 மணிக்கு சார்மினார் மஸ்ஜித் பின்புறம் உள்ள இந்தியன் அசோசியன் ஹாலில் கருத்தரங்கம் நடத்துகிறது. இதை அனைவரும் கலந்து கொள்ளுமாறு அந்த பேரவை அழைப்பு விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications