Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காந்தியும், மண்டேலாவும் எனது ஹீரோக்கள் - ஒபாமா

Subscribe to Oneindia Tamil

Obama
வாஷிங்டன்: உலகத் தலைவர்களில் மகாத்மா காந்தியும், நெல்சன் மண்டேலாவும் எனது ஆதர்ச ஹீரோக்கள் என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.

ரஷ்ய நாட்டின் செய்தி நிறுவனமான இடார்-டாஸ், ரஷ்யா டிவிக்கு முதல் முறையாக பேட்டி அளித்துள்ளார் ஒபாமா.

அப்போது அவர் கூறுகையில், சர்வதேச அளவில் என்னை மிகவும் கவர்ந்தவர்கள், எனக்கு ஆதர்ச ஹீரோக்களாக விளங்குபவர்கள் காந்தியும், மண்டேலாவும்தான்.

வன்முறையை நாடாமல், மக்களின் மனங்களையும், இதயங்களையும் கவர்ந்த, மாற்ற முடிந்த தலைவர்கள்தான் எனக்கு மிகவம் பிடிக்கும். அந்த அடிப்படையில் காந்தியும், மண்டேலாவும் என்னைக் கவர்ந்த தலைவர்கள்.

அதேபோல ஆப்ரகாம் லிங்கனும் என்னை மிகவும் கவர்ந்த தலைவர்களில் ஒருவர். அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரும் நெருக்கடியான இனப் போரின்போது, அதை அவர் கையாண்ட விதம் என்னை மிகவும் கவர்ந்தது.

அடிமைகளாக இருந்தவர்களாகட்டும், அடிமைகளை வைத்திருந்தவர்களாக இருக்கட்டும் அனைவரின் கருத்துக்களையும் காது கொடுத்துக் கேட்கும் பொறுமையுடன் கூடியவர் அவர். அனைத்து மக்களையும் ஓரணியில் திரட்டிய பெருமைக்குரியவர் என்று கூறியுள்ளார் ஒபாமா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+