கோவையில் சர்வதேச குழந்தைகள் மாநாடு - அப்துல் கலாம் பங்கேற்பு
கோவை: ஆகஸ்ட் 7 முதல் 12 ம் தேதி வரை கோவையில் நடைபெற உள்ள சர்வதேச குழந்தைகள் மாநாட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பங்கேற்க உள்ளார்.
ஆகஸ்ட் 7 முதல் 12 ம் தேதி வரை கோவையில் சர்வதேச குழந்தைகள் மாநாடு நடைபெறுகிறது.
சாந்தி ஆசிரமம், கோவை பாரதிய வித்யா பவன், குமரகுரு தொழில்நுட்பக்கல்லூரி ஆகியன, கோவையின் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து இம் மாநாட்டை
நடத்துகின்றன.
இது குறித்து சாந்தி ஆசிரமம் இயக்குநர் வினு அறம் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது வரை ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே நடத்தப்பட்ட இம் மாநாடு முதன்முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது.
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இருந்தும், 20 நாடுகளில் இருந்தும் இளம் பருவத்தைச் சேர்ந்த 700 பேர் பங்கேற்க உள்ளனர். மேலும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 2,500 பேர் கலந்து கொள்கின்றனர்.
இளம் பருவத்தினரிடையே ஒற்றுமை உணர்வு, சகோதரத்துவ எண்ணத்தை வளர்க்க வேண்டும் என்றும், உலக அமைதி, சமாதானம் போன்ற உயர்வான லட்சியங்களை அடைவதற்கான எண்ணங்கள், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும்
மத மற்றும் கலாசார வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு சமூக முன்னேற்றத்துக்கு உதவுவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இம் மாநாடு நடத்தப்படுகிறது.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, வறுமை ஒழிப்பு, எச்ஐவி எய்ட்ஸ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமய நல்லிணக்கம் போன்றவை குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
மாநாடு நிறைவு நாள் அன்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பங்கேற்க உள்ளார் என்றார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications