சூரிய கிரகணத்தை பார்க்க ஈரோட்டில் சிறப்பு ஏற்பாடு

முழுநீள சூரிய கிரகணம் நாளை ஜூலை 22 அன்று ( புதன்கிழமை) நிகழ்கிறது. வழக்கமாக சூரிய கிரணம் 3 நிமிடத்தில் முடிந்து விடும். ஆனால் நாளை
ஏற்படும் சூரிய கிரகணம் 6 நிமிடம் 39 நொடிகள் முழு மறைப்பை ஏற்படுத்த உள்ளது.
இத்தகைய முழு சூரிய கிரகணம் 350 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ உள்ளது.
இனிமேல் இப்படி ஒரு சூரிய கிரகணம் 123 ஆண்டுகளுக்கு பிறகுதான் வரும். நாளை நிகழ இருக்கும் சூரிய கிரகணம் காலை 5.28 மணிக்கு தொடங்கி, காலை 6.30 மணிக்கு கிரகணம் விலகி, 7.28 மணிக்கு முழுவதுமாக விலகி விடும். காலை 6.27 மணிக்கு முழு மறைப்பை பார்க்கலாம்.
ஈரோட்டில் சூரிய உதயம் நாளை 6 மணிக்கு தொடங்கும். அப்போதே நாம் 60 சதவீத கிரகணத்தை காண முடியும்.
இதை பார்க்க தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்ட மையம் சார்பில் சூரிய கிரகணத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையத்தில் காலை 6 மணி முதல் சூரிய கிரகணத்தை கிரகண கண்ணாடிகள், ஊசித்துளை காமிரா ஆகியவை
மூலம் பொதுமக்களுக்கு சூரிய கிரகணம் காண்பிக்கப்பட உள்ளது.
மேலும், சூரிய கிரகணம் குறித்த கருத்தரங்கும் நடத்தப்பட உள்ளது. எனவே சூரிய கிரகணத்தை பார்க்க விரும்புபவர்கள் கொங்கு கல்வி நிலையத்துக்கு வந்து
காணலாம்.
இந்த தகவலை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் என்.மணி தெரிவித்து உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications