நாளை மாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவு தினம் - தாமிரபரணியில் நாளை அஞ்சலி
நெல்லை: நெல்லையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆற்றில் மூழ்கி பலியான தினத்தையொட்டி அரசியல் கட்சியினர் தாமிரபரணி ஆற்றில் நாளை அஞ்சலி செலுத்தவிருப்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 99ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி கூலி உயர்வு கேட்டு போராடி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நெல்லை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்றபோது கலவரம் ஏற்பட்டது.
போலீசார் தடியடி நடத்தினர். இதில் போலீஸாருக்குப் பயந்து தாமிரபரணி ஆற்றில் தொழிலாளர்கள் குதித்தனர். அதில், 17 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆண்டுதோறும் ஜூலை 23ம் தேதி புதிய தமிழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தனிதனியாக தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தாண்டு 16 அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், நெல்லை தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் அஞ்சலி செலுத்த தனித்தனி நேரம் ஓதுக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி நெல்லை முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றங்கரை, ரயில்வே நிலையம், தலைவர்கள் சிலைகள், கட்சி அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications