திருச்சி பெண் விஞ்ஞானி உமாவுக்கு தேசிய விருது
திருச்சி: திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி உமாவுக்கு, மகளிருக்கான சிறந்த வேளாண்மை ஆராய்ச்சியாளர் விருது கிடைத்துள்ளது.
திருச்சி மாவட்டம், போதாவூரில் உள்ளது தேசிய வாழை ஆராய்ச்சி மையம். இந்த மையத்தில் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றி வருகின்றார் விஞ்ஞானி உமா.
இவருக்கு வாழை ஆராய்ச்சியில் சாதனை புரிந்ததற்காக 2008 ம் ஆண்டு மகளிருக்கான சிறந்த வேளாண் ஆராய்ச்சியாளர் விருதை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் வழங்கியுள்ளது.
கடந்த 16 ம் தேதி, டெல்லியில் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா இந்த விருதை உமாவுக்கு வழங்கி கவுரப்படுத்தினார்.
விருது பெற்ற உமாவுக்கு, திருச்சியில் நேற்று, தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் உமா பேசுகையில்,
வடகிழக்கு மாநிலங்களில் நான் சுற்றுப்பயணம் செய்தேன். அப்போது சேகரித்த360 ஒப்பற்ற வாழை ரகங்களை கொண்டு, ஆசியாவிலேயே பெரிய வாழை மரபணு வங்கியை ஏற்படுத்தியுள்ளேன்.
நாட்டிலேயே முதல் முறையாக, வாழை மரபுக்கூறு வங்கி (டிஎன்ஏ சேமித்தல்), செல் குழம்பு வங்கி ஏற்படுத்தியுள்ளேன்.
மேலும், உதயம் என்ற அதிக மகசூல் தரும் வாழை மற்றும் 4 அலங்கார வாழை ரகங்களை கண்டுபிடித்துள்ளேன்.
புதிதாக கண்டுபிடித்த திசு வளர்ப்பு முறைகள் மூலம் சிறுமலைப்பழம், மனோரஞ்சிதம், லாடன் போன்ற வாழை ரகங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்றார்.
இந்த விருது, தமிழகத்தில் முதல்முறையாக இவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications