தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது - சபாநாயகர் ஆவுடையப்பன்
தென்காசி: தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது என குற்றாலத்தில் நடந்த விழாவில் சபாநாயகர் ஆவுடையப்பன் பேசினார்.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் சங்க மாநில கோரிக்கை மாநாடு மற்றும் மாநில, மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்களுக்கான விருதுகள் வழங்கும் விழா குற்றாலத்தில் நடந்தது.
விழாவில் சபாநாயகர் ஆவுடையப்பன் பரிசுகள் வழங்கி பேசுகையில்,
கல்வி வளர்ச்சிக்கு கை கொடுக்கும் அரசாக முதல்வர் கருணாநிதி அரசு விளங்குகிறது. கிராமங்களிலும், நகர் புறங்களிலும் அதிக அளவில் மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது.
பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை நீக்கி மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி பணியை வழங்க வேண்டும். வருங்கால சமுதாயத்தினரை செம்மைப்படுத்தும் பணியை மெட்ரிக் பள்ளிகள் சிறப்பாக செய்து வருகின்றன.
கல்வி கற்காத குழந்தைகள் இல்லை என்ற நிலையை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. மெட்ரிக் பள்ளிகளின் கோரிக்கைகள் மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் அதனை முதல்வர் கருணாநிதி நிச்சயமாக நிறைவேற்றுவார் என்பதில் சிறிதும் ஐயம் வேண்டாம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications