உயிரோடு இறுதி சடங்கு-திண்டுக்கல்லில் வித்தியாச திருவிழா
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கோவில் திருவிழாவில் உயிரோடு உள்ளவருக்கு இறுதிச் சடங்கு நடத்தும் வித்தியாசமான திருவிழா வெகு விமர்சிகையாக நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே ஆலத்தூரான்பட்டியில் செல்வ விநாயகர், மாரியம்மன், காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் திருவிழா நடைபெறும்.
விழா காலத்தில் இப்பகுதியில் இறப்பு போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க, மஞ்சள் நீராடலுக்கு முன் உயிருள்ள நபர் ஒருவருக்கு சவ ஊர்வலத்துடன் இறுதிச் சடங்குகள் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கடந்த 1994ம் ஆண்டிற்கு பிறகு இந்த ஆண்டு தான் விழா நடக்கிறது. விழா கடந்த ஜூலை 28ல் சாமி சாட்டுதலுடன் துவங்கியது. இந்த விழாவில், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் பூஞ்சோலை புறப்பாடு நடந்தது.
முன்னதாக இக்கிராமத்தில் புளியந்தோப்பு பகுதியில், கொள்ளாயிரம் (87) என்பவருக்கு இறந்தவரைப் போன்று அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு, நீர்மாலை எடுத்தல், தேரில் அமர்த்தி ஊர்வலமாக எடுத்து வருதல் போன்ற சடங்குகள் நடைபெற்றது.
மேலும், அவரது மனைவி போல நடித்த நபருக்கு பூ, வளையல், தாலி ஆகியவற்றை களையும் நிகழ்ச்சி நடந்தது. பூஞ்சோலை வரை ஊர்வலம் நடத்தப்பட்டு, அங்கு கொள்ளாயிரம் அலங்காரம் கலைத்து தனது வீடு திரும்பினார்.
குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் மட்டுமே, இறந்தவர் போல நடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். கொள்ளாயிரம் 3வது முறையாக இந்த விழாவில் சவமாக ஊர்வலம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொள்ளாயிரம், 'தொள்ளாயிரம்' ஆண்டுகள் வாழ வாழ்த்துவோம்!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications