3 பேருக்கு தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது
சென்னை: தமிழக அரசு வழங்கும் கல்பனா சாவ்லா விருது 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியா விண்வெளி ஓடத்தில் பயணம் செய்து பூமிக்குத் திரும்பும்போது அகால மரணமடைந்த இந்திய பெண் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பெயரில் ஆண்டு தோறும் தமிழக அரசு வீரச் செயலுக்கான விருதினை வழங்கி வருகிறது.
கடந்த ஜெயலலிதா ஆட்சியில் இந்த விருது ஏற்படுத்தப்பட்டது. பெண்களுக்கான விருது இது.
ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது இந்த விருது வழங்கப்படும். ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு, தங்கப் பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான விருதினை மூன்று பேர் பெறுகின்றனர்.
டாக்டர் ராஜ மகேஷ்வரி, ராஜலட்சுமி, புஷ்பாஞ்சலி ஆகியோருக்கு விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
டாக்டர் ராஜ மகேஷ்வரி சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சிறுநீரகவியல் மருத்துவர் ஆவார். ராஜலட்சுமி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை ஆவார்.
புஷ்பாஞ்சலி, திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்தவர். இவரது மகன் ஹிதேந்திரன் மூளைச் சாவை சந்தித்தபோது அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுத்து தமிழ மக்களை நெகிழவித்தவர்கள் அவரது பெற்றோர். அதன் பின்னர்தான் தமிழகத்தி்ல உறுப்பு தானம் குறித்த பெரிய அளவிலான விழிப்புணர்வு ஏற்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications