சென்னை மகளிர் சிறப்பு ரயில் - தொடங்கி வைத்தார் ப.சிதம்பரம்
சென்னை: சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் சிறப்பு ரயில்களை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாம்பரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
ரயில்வே பட்ஜெட்டில் சென்னையில் அனைத்து மகளிர் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை தாம்பரம் - கடற்கரை, அரக்கோணம் - கடற்கரை, கடற்கரை - வேளச்சேரி ஆகிய மார்க்கங்களில் 3 மகளிர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இன்று முதல் இவை ஓடத் தொடங்குகின்றன.
இந்த ரயில்கள் தொடக்க விழா இன்று சென்னையில் நடந்தது.
தாம்பரம் ரயில் சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சிறப்பு ரயிலை பச்சைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், இ.அகமது, முனியப்பா, ஜெகத்ரட்சகன், தமிழக போக்குவரத்து அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரயில்கள் ஓடும் நேரம்...
தாம்பரம் - கடற்கரை சிறப்பு மகளிர் ரயில் தினசரி காலை 8.37 மணிக்கு தாம்பரத்திலிருந்து கிளண்பி 9.32 மணிக்கு கடற்கரை சந்திப்பை வந்தடையும்.
மறு மார்க்கத்தில் கடற்கரையிலிருந்து மாலை 5.57 மணிக்குப் புறப்பட்டு மாலை 6.52க்கு தாம்பரத்தை வந்தடையும்.
அரக்கோணம் - கடற்கரை ரயில், அரக்கோணத்தில் காலை 7 மணிக்குப் புறப்படும். 8.55க்கு கடற்கரையை வந்தடையும். மறு மார்க்கத்தில் கடற்கரையிலிருந்து மாலை 5.50 மணிக்குப் புறப்பட்டு 8.05 மணிக்கு அரக்கோணத்தை சென்றடையும்.
வேளச்சேரி - கடற்கரை ரயில் காலை 9 மணிக்கு வேளச்சேரியில் கிளம்பி 9.40 மணிக்கு கடற்கரையை அடையும். மறு மார்க்கத்தில் மாலை 5.05 மணிக்கு கடற்கரையிலிருந்து கிளம்பி 5.45 மணி்க்கு வேளச்சேரி சென்று சேரும்.
3 ரயில்களிலும் தலா 9 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். லேடீஸ் ரயில் என்று தெரியாமல் (அல்லது தெரிந்தே) ஆண்கள் யாரும் ஏறி விடாமல் இருப்பதற்காக, முதல் ஐந்து நாட்களுக்கு மட்டும் ஒவ்வொரு பெட்டியிலும் பெண் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருப்பார்கள்.
மகளிர் சிறப்பு ரயி்ல்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஓடாது. மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் இவை ஓடாது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications