செப்டம்பர் 26ல் சனிப்பெயர்ச்சி-திருநள்ளாறில் விழா ஏற்பாடுகள்
திருநள்ளாறு: வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கவுள்ள்ளது. அன்றைய தினம் சனீஸ்வர பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார்.
சனிபகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பார். இந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3.27 மணிக்கு சனி பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார்.
இதையொட்டி புதுச்சேரி மாநிலம், காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா மிக விமரிசையாக நடக்கவுள்ளது.
அன்று சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளன.
இந்த கோவிலில் மட்டும் தான் சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. தோஷ நிவர்த்திக்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமையில் இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா வருவதால் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகளவில் பக்தர்கள் திருநள்ளாறுக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி திருநள்ளாறில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்கவும் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications