உ.பியில் வழிபறி கொள்ளையனுக்கு சிலை!
பகோதி: உத்தர பிரதேச மாநிலத்தில் வழிபறி கொள்ளையன் ஒருவனுக்கு சிலை திறக்கப்பட இருக்கிறது. இந்த சிலையை அந்த கொள்ளையனே தனது வீட்டு வாசலில் திறக்க முடிவு செய்துள்ளான்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சிறிய நகரை சேர்ந்தவர் ஜெகன்நாத் பின்த். இவர் மீது வழிபறி கொள்ளையில் ஈடுபட்டது உள்பட 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
உத்தர பிரதேசத்தில் அவர் போகாத சிறை இல்லை என்று சொல்லும் அளவுக்கு வாரனாசி, பதோகி, அலகாபாத், மிர்சாபூர் என அனைத்து முக்கிய சிறைகளிலும் அடைக்கப்பட்டு இருந்திருக்கிறார்.
பின்னர் வாழ்க்கை பாதையை மாற்றி கொண்ட அவர் 1980ல் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை. பி்ன்னர் 1987ல் அந்த கிராமத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இன்று வரை அவர் தான் கிராமத்தின் தலைவர்.
தற்போது அவர் தனக்கு தானே சிலை திறந்து கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார். தனது வீட்டு வாசலில் சுமார் ரூ. 50 ஆயிரம் செலவில் 6 அடி உயரத்துக்கு சிலை அமைத்து வருகிறார். இதற்கு உள்ளூர் நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், அதையெல்லாம் மனிதர் கண்டு கொள்ளவில்லை.
இது குறித்து அவர் கூறுகையில்,
வீட்டுக்கு வெளியே எனது சிலையை அமைத்து வருகிறேன். மறைவுக்கு பின்னர் மக்கள் என்னை மறந்துவிட கூடாது என்பதால் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இது சிமென்ட் சிலை.
தற்போது உபியில் பலரும் தங்களது சிலையை தாங்களே திறந்து வைத்து கொள்வதால், நானும் உயிருடன் இருக்கும் போதே எனது சிலையை பார்க்க ஆசைப்படுகிறேன்.
நான் வால்மீகி போல்...
ராமாயணத்தை எழுதிய வால்மீகி கூட துவக்கத்தில் கொள்ளையராக இருந்தவர் தான். பின்னர் மனம் மாறி பெரும் முனிவராக மாறவி்ல்லையா. வால்மீகி மாறிய போது இந்த ஜெகன்நாத் பின்த்தால் மாற முடியாதா...
என் வீ்டடின் முன்பு சிலையை கட்டி வருகிறேன். இதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி செய்தால் நீதிமன்றத்தில் முறையிடுவேன். இதன்மூலம் கொள்ளையன் என்ற எனது அடையாளம் மறைந்துவிடும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications