மதுரையில் நான்காவது புத்தகத் திருவிழா தொடக்கம்
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் 250 ஸ்டால்கள், ஒரு கோடி நூல்களுடன் நான்காவது புத்தகத் திருவிழா நேற்று துவங்கியது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நான்காவது புத்தகத் திருவிழா நேற்று துவங்கியது.
இந்த விழாவிற்கு, மதுரை வணிகவரித் துறை துணை கமிஷனர் தேவேந்திரபூபதி தலைமை வகித்தார். மாநகர காவல்துறை ஆணையர் நந்தபாலன் துவக்கி வைத்தார்.
விழாவில், சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன் பேசுகையில், சென்னையில் 32 -வது முறையாகவும், மதுரையில் 4 முறையாகவும் புத்தக திருவிழா நடைபெறுகிறது.
இதில், 80 ஸ்டால்களில் ஆங்கில நூல்கள், பள்ளி, கல்லூரி பாட கைடுகள், போட்டித் தேர்வு தொடர்பான நூல்கள் உள்ளன. 145 தமிழ் பதிப்பாளர்களின் நூல்களும் இடம் பெற்றுள்ளன என்றார்.
விழாவில், மாவட்ட கலெக்டர் மதிவாணன் , சங்க செயலாளர் சண்முகம், பொருளாளர் தனசேகரன், மதுரை குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications