உலகத் தமிழ் மாநாடு: 'நாங்கள் தயார்'!-கோவை ஆணையர்!
Subscribe to Oneindia Tamil
கோவை: ஒன்பதாவது உலக தமிழ் மாநாட்டிற்கு வரும் பார்வையாளர்களுக்கு அனைத்து வசதிகளை உடனுக்குடன் செய்ய, கோவை மாநகராட்சி தயாராக உள்ளது என அதன் ஆணையர் அன்சுல் மிஸ்ரா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடு, வரும் ஜனவரியில் கோவையில் நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது பற்றி நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன்.
அலுவலகரீதியாக இதுவரை எந்தவித அறிவிப்போ, ஏற்பாடுகளோ செய்ய, அரசு அறிவுறுத்தவில்லை.
பிரமாண்டமாக, நான்கு நாட்கள் நடக்கும் இம்மாநாட்டு ஏற்பாடுகளை மேற்கொள்ள, சில ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு நியமிக்கும் என தெரிகிறது. அந்த அதிகாரிகள் மாநாட்டு ஏற்பாடுகளை கவனிப்பர்.
மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் எந்தெந்த பணிகள் மேற்கொள்ள முடியுமோ அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து கொடுக்க தயாராக உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications