வறட்சி-ரூ. 2500க்கு மனைவி, மகளை அடகு வைக்கும் உபி விவசாயிகள்
லக்னௌ: கடும் வறட்சி காரணமாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அதற்கு பதிலாக தங்களது மனைவி, மகள்களை அடமானம் வைக்கும் அவல நிலை அதிகரித்து வருகிறது.
உத்தரபிரேதசம் மாநிலத்தில் பண்டல்கன்ட் பகுதியில் இந்த சம்பவங்கள் அனைத்தும் நடந்து வருகிறது. இங்கிருக்கும் விவசாயிகள் அனைவரும் படிக்காதவர்கள். வானத்தை பார்த்து காலம் தள்ளி வருகின்றனர்.
அவர்கள் வேறு வழியில்லாமல் வட்டிக்கடைகாரர்களிடம் கடன் வாங்கி விவசாயம் செய்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு வட இந்தியாவில் பருவ மழை பொய்த்து கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கஞ்சிக்கே வழியில்லாமல் கஷ்டப்படுகின்றனர்.
இதனால் விவசாயிகள் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர். அவர்களின் கஷ்டத்தை பார்த்த பணக்கார வட்டிக்கடைக்காரர்கள். பணத்துக்கு பதிலாக அவர்களது மனைவி மற்றும் மகள்களை அடகு வைக்க கூறி வற்புறுத்துகின்றனர். வேறு வழியில்லாமல் பலரும் இதற்கு சம்மதித்துவிடுகின்றனர்.
ஜான்சி நகர் அருகே சிப்ரி பசாரில் ஒரு சந்தைக்கு சென்ற விவசாயி ஒருவர் வட்டிக்கடைகாரரிடம் ரூ. 5 ஆயிரத்துக்கு கடன் வாங்கினார். எழுத படிக்க தெரியாது என்பதால் அந்த வட்டிக்கடைகாரர் அவரிடம் ரூ. 50 ஆயிரம் என எழுதி வாங்கி கொண்டார்.
இங்குள்ள ஜிங்ரிபஜார் என்ற இடத்தில் விவசாயி ஒருவர் வட்டிக்கடைக்காரரிடம் 5 ஆயிரம் கடன் வாங்கினார். எழுத படிக்க தெரியாத அவரிடம் வட்டிக்கடைக்காரர் ரூ. 50 ஆயிரம் கடன் கொடுத்தது போல எழுதி வாங்கி கொண்டார்.
சில மாதங்கள் கழித்து அந்த வட்டிக்கடைக்காரர் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால், அந்த விவசாயிடம் பணமில்லை. இதையடுத்து அந்த விவசாயின் 17 வயது மகளை அவர் அடமானமாக அழைத்து சென்றுவிட்டார். பணத்தை கொடுத்துவிட்டு மகளை மீட்டு கொள்ளுமாறு கூறிவிட்டார்.
அந்த பெண்ணை கடந்த 6 மாத காலமாக அவர் அடைத்து வைத்து கற்பழித்துள்ளார். இதை பொறுக்கமாட்டாத அந்த சிறுமி போலீஸிடம் புகார் கொடுத்தார். ஆனால், இந்த புகாருக்கு உடனடி பதிலாக அந்த வட்டிக்காரர் பணம் கேட்டு அந்த விவசாயியை மிரட்டு வருவதாக கூறப்படுகிறது.
மற்றொரு சம்பவம் அதே பகுதியில் நடந்துள்ளது. இங்கு காளிச்சரண் என்ற விவசாயி தனது மனைவி குஷ்மாதேவியை அடகு வைத்திருக்கிறார். அவர் வாங்கிய கடன் வெறும் ரூ. 2500 தான்.
இந்த அற்ப காசுக்காக அவர் தனது மனைவியை வட்டிக்கடைகாரர் தேஷ்ராஜின் மனைவி என எழுதி கொடுத்துள்ளார். சட்ட பிரச்சனையில் தப்பிக்க முன்கூட்டியே யோசித்த அந்த வட்டிக்கடைக்காரர் இது போல் செயல்பட்டுள்ளார். தற்போது அந்த ஏழை விவசாயி தனது மனைவியை மீட்க போராடி வருகிறார்.
இந்நிலையில் தேசிய பெண்கள் கமிஷன் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட இந்த கமிஷனின் தலைவர் யஷ்மின் அப்ரர் இது குறித்து மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க இருக்கிறார்.
அதுவும் இது போன்ற பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் இந்திய சுதந்திரத்துக்காக போராடி ஜான்சி ராணி பிறந்து, வளர்ந்த ஜான்சி நகரில் நடப்பது கொடுமையானது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications