பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் - திருத்தப்பட்ட 2ம் பதிப்பு பிப்ரவரியில் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

திருச்சி வே.ஆனைமுத்து அவர்களால் பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் நூல் மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு, 01.07.1974 இல் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியால் வெளியிடப்பட்டது.

அதன் படிகள் விற்றுத் தீர்ந்தன. பல ஆண்டுகளாக அதன் படிகள் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. உலகு தழுவிய தமிழர்கள் இந்த நூலின் மறுபதிப்பு எப்பொழுது வெளிவரும் என்று ஆர்வமுடன் வினவியவண்ணம் இருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தந்தை பெரியார் பல காலம் எழுதியும் பேசியும் வந்த செய்திகள் உரிய வகையில் தொகுக்கப்பட்டு 2010 பிப்பரவரியில் வெளியிடப்பட உள்ளன. முன் வெளியீட்டுத் திட்டத்தில் இந்த நூல்கள் வெளியிடப்படுவதால் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ள அரிய வாய்ப்பு.

இத் தொகுப்பு உயரிய, அழகிய, தரமான பதிப்பாக அமைகிறது. 100 பக்கங்கள் முதல் 675 பக்கங்கள் வரையிலான தொகுப்புகளாக மொத்தம் 9000 பக்கங்களைக் கொண்டுள்ளது.

பெயர்க்குறிப்பு அடைவு, சொற்குறிப்பு அடைவு, அருஞ்சொற்பொருள் அகராதி, இன்றியமையாத அடிக் குறிப்புகள் தரப்பெற்றுள்ளன.

நூலை வெளியிடுவோர் பெரியார் ஈ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளையினர் ஆவர்.

20 தொகுதிகளைக் கொண்ட 9000 பக்கம் கொண்டு இந்த நூலின் விற்பனை விலை ரூ. 5,800 ஆகும்.

ஆனால் முன்பதிவு விலையில் ரூ. 3500க்குக் கிடைக்கும்.

முன்பதிவுத் தொகை செலுத்திப் பதிவு செய்துகொள்ள கடைசி நாள் 15.11.2009.

இரண்டு தவணைகளில் முன்பதிவு செய்துகொள்ள விரும்புவோர் முதல் தவணையை (ரூ. 2,000) 15.11.2009லும், இரண்டாம் தவணையை (ரூ.1,800) 15.12.2009லும் செலுத்தவேண்டும்.

வங்கி வரைவோலையாகத் தொகையை அனுப்ப விரும்புவோர் (Bank Draft)

PERIYAR E.V.RAMASAMY-NAGAMMAI EDUCATIONAL AND RESEARCH TRUST என்று ஆங்கிலத்திலோ பெரியார் ஈ.வே,இராமசாமி -நாகம்மை கல்வி,ஆராய்ச்சி அறக்கட்டளை எனத் தமிழிலோ வரைவோலை எடுத்து,

திரு.வே.ஆனைமுத்து, தலைவர்
பெரியார்-நாகம்மை அறக்கட்டளை,
19,முருகப்பா தெரு,
சேப்பாக்கம்,சென்னை-600005, இந்தியா

என்னும் முகவரிக்கு அனுப்பலாம்.

தொலைபேசி எண்: + 91 44 2852 2862

மின்னஞ்சல் முகவரி:

[email protected]
[email protected]

நன்றி - http://muelangovan.blogspot.com/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+