இறந்த பின் செய்யும் தானம் கண்தானம் மட்டுமே-நெப்போலியன்
திண்டுக்கல்: உயிருடன் இருக்கும் போது பணம், பொருள் ஆகியவற்றை நாம் தானம் செய்ய முடியும். ஆனால், இறந்த பின்னர் நம்மால்க ண்தானம் மட்டுமே செய்ய முடியும் என மத்திய சமூக நீதி இணை அமைச்சர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் மாற்றுத்திறன் உடையோருக்கான உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் வள்ளலார் தலைமையில் நடந்தது.
இதில் மத்திய சமூக நீதி இணை அமைச்சர் நெப்போலியன் கலந்து கொண்டு பேசுகையில்,
இந்தியாவில் முதன்முறையாக நடக்க இயலாத, தசைத்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான பள்ளி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் துவங்கப்பட்டுள்ளது.
ஐந்து வயதிற்குள் குழந்தைகளின் பேச்சு, கேட்கும் திறனை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப சிகிச்சை முறைகளை வழங்கினால் மட்டுமே சிறப்பான எதிர்காலத்தை அவர்களுக்கு உருவாக்கி தரமுடியும்.
ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடுள்ள குழந்தைகள் நலனுக்காக, சென்னை முட்டுக்காட்டில் தேசிய நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்தியாவில் 2 கோடியே 19 லட்சம் பேர் மாற்றுத்திறன் உடையவர்களாக உள்ளனர். இவர்களில் ஒரு கோடியே 6 லட்சம் பேர் கண்பார்வை இல்லாதவர்களாவர். ஆனால், ஆண்டிற்கு 30 ஆயிரம் பேர் மட்டுமே கண்தானம் செய்கின்றனர். அனைவருக்கும் பார்வை வழங்குவது பார்வை உள்ளவர்களின் கையில் தான் உள்ளது.
உயிருடன் இருக்கும்போது பணம், பொருள் ஆகியவற்றை நாம் தானம் செய்ய முடியும். ஆனால், இறந்த பின்பு நாம் செய்வது கண்தானம் மட்டுமே. அதை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications