டி.வி. சேனல் துவங்க இந்திய ரயில்வே திட்டம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தனக்கென தனியாக ஒரு டி.வி. சேனல் தொடங்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே பயணிகளுக்கான குறை தீர்க்கும் குழு, ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
நாடாளுமன்றத்துக்கு என லோக் சபா டிவி இருப்பதைப் போல ரயில்வேவுக்கு என ஒரு சேனலை தொடங்கவும் அதில் ரயில்வே தொடர்பான நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்பலாம் என்றும் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய சுற்றுலா தலங்கள் குறித்த தகவல்கள், இந்திய கலாசாரம் தொடர்பான நிகழ்ச்சிகள், பயணச் செய்திகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இதில் அளிக்கலாம் என்றும் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தப் பரிந்துரைகளை ரயில்வே வாரியம் ஆய்வு செய்து வருகிறது.
இந்த பரிந்துரைகள் ஏற்கப்பட்டால், விரைவிலேயே ரயில்வே டி.வி. தொடங்கப்பட்டுவிடும்.












Click it and Unblock the Notifications