செந்தூர் எக்ஸ்பிரஸ் விரைவில் தினசரி ரயிலாகும்
சென்னை: செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தொடர்ந்து திருச்சி மார்க்கமாகவே இயக்கப்படும் என ரயில்வே புதிய அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ரயில் படிப்படியாக தினசரி சேவைக்கு மாற்றப்படும் என தெரிகிறது.
வாரந்தோறும் திருச்செந்தூர் - சென்னை இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூருக்கு வருகிறது.
மயிலாடுதுறை- விழுப்புரம் அகலபாதைப் பணிகள் நிறைவடைந்ததும் இந்த ரயில் மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த 2009 ஜூன் வரையிலான ரெயில்வே கால அட்டவணையிலும் இந்த ரயில் மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நவம்பர் 2009ல் வெளியிடப்பட்ட புதிய கால அட்டவணையில் திருச்செந்தூர்- சென்னை எக்ஸ்பிரஸ் தொடர்ந்து மதுரை, திருச்சி, விழுப்புரம் மார்க்கமாக வாராந்திர ரெயிலாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பெட்டிகள் பற்றாக்குறை சரி செய்யப்பட்டதும் படிப்படியாக தினசரி ரெயிலாக மாற்றப்படும் என்றும் தெரிய வருகிறது.
-
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications