திருவண்ணாமலை தீபத் திருவிழா ஏற்பாடுகள் 'ஜரூர்'
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை விநாயகர், சந்திரசேகர் சுவாமிகள் வீதிஉலா வருவார்கள். இரவில் பஞ்சமூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் உலா வருவார்கள்.
விழாவின் முதல் நாள் இரவு உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் அதிகார நந்தியில் மாடவீதியில் உலா வருவார்.
வருகிற 1ம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக 3500 கிலோ நெய் வாங்கப்படுகிறது.
விழாவையொட்டி கோயிலில் உள்ள வாகனங்கள் அனைத்தும் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோயில் கோபுரங்கள் மின் அலங்காரத்தில் ஜொலிக்கின்றன.
தீபத்திருவிழா பாதுகாப்பு பாதுகாப்புப் பணியில் 8 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications