நல்ல தலைவர்களை உருவாக்க அரசியல்வாதிகளுக்கு பயிற்சிப் பள்ளி - லோக்சபாவில் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

LS sees demand for institutes to train politicians
டெல்லி: ஐஐஎம் போல நாடு முழுவதும் பயிற்சிப் பள்ளிகளை நிறுவி, அரசியல்வாதிகளுக்குப் பயிற்சி அளித்து ராமர், கிருஷ்ணர் போல நல்ல தலைவர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லோக்சபாவில் பாஜக உறுப்பினர் ராஜன் சுஷாந்த் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 21வது நூற்றாண்டில் இந்தியா வல்லரசாக உருவாக வேண்டும் என்றால், இதை நாம் செய்தாக வேண்டும். நம் நாட்டில் ஏராளமான அரசியல்வாதிகள் உள்ளனர். ஆனால் நல்ல தலைவரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

எனவே இவர்களுக்குப் பயிற்சிப் பள்ளிகள் அமைத்து ராமர், கிருஷ்ணர் போன்ற நல்ல தலைவர்களை உருவாக்க வேண்டும்.

இப்போதெல்லாம் நல்ல, தரமான வேட்பாளர்கள் கூட கிடைக்காத அவல நிலை காணப்படுகிறது. குற்றப் பின்னணி உடையவர்கள், படிப்பறிவில்லாதவர்கள்தான் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஆகின்றனர், தலைவர் ஆகின்றனர். இதனால் புத்திசாலித்தனமான அரசியல்வாதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஐஐஎம்-கள் மூலம் நல்ல நிர்வாகவியல் நிபுணர்களை நாம் உருவாக்குகிறோம். அதேபோல சிவில் சர்வீஸ் பணிகளுக்குரியவர்களையும் தயாரித்து அனுப்புகிறோம். அதே வரிசையில் அரசியல்வாதிகளுக்கும் பயிற்சிப் பள்ளிகள் அமைக்க வேண்டியது அவசியம் என்றார் சுஷாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+