தமிழ் செம்மொழி மாநாடு - மேலும் 4 குழுக்கள் அமைப்பு
சென்னை: கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக மேலும் 4 குழுக்களை தமிழக அரசு அமைத்துள்ளது.
ஏற்கனவே 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மொத்த குழுக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாநகரில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினையொட்டி இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 17 குழுக்களை தவிர மேலும் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது பற்றிய விவரம் வருமாறு:
1. மாநாட்டு ஏற்பாடுகள் மேற்பார்வைக் குழு
தலைவர் - துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
துணைத் தலைவர்கள் - கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி.மணி, குடிசைமாற்று வாரியத் துறை அமைச்சர் சுப.தங்கவேலன், வணிக வரித் துறை அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா
இளைஞர் நலம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, பால்வளத் துறை அமைச்சர் உ.மதிவாணன் மற்றும் பிற குழுக்களின் தலைவராக உள்ள அமைச்சர்கள்.
உறுப்பினர்கள் - எம்.எல்.ஏ.க்கள் சி.ஞானசேகரன், து.ரவிக்குமார், தலைமைச் செயலர், பொது மேலாளர் (தென்னக ரெயில்வே), முதன்மைச் செயலர் (உள்துறை), முதன்மைச் செயலர் (நிதி), இயக்குநர், காவல் துறை தலைவர், தமிழ்நாடு மின்சார வாரியம் முதன்மைச் செயலர், ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை, காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு).
துணை வேந்தர், பாரதியார் பல்கலைக்கழகம், செயலர் (பொதுத் துறை), செயலர் (சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை), செயலர் (செய்தித்துறை), செயலர் (போக்குவரத்துத் துறை), செயலர் (நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை), மண்டல இயக்குநர், இந்திய விமான நிலையங்களின் ஆணையம், சென்னை.
தனி அலுவலர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, மாவட்ட ஆட்சியர், கோவை, ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார்கள்.
2. போக்குவரத்து ஏற்பாட்டுக் குழு
தலைவர் - நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், துணைத் தலைவர்களாக எம்.எல்.ஏ. சி.கோவிந்தசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.ரா.சுப்பையன்.
ஒருங்கிணைப்பாளர்களாக போக்குவரத்துத்துறை ஆணையர் மச்சேந்திரநாதன், கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் பு.உமாநாத்.
உறுப்பினர்கள் - போக்குவரத்துத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, கோவை துணை ஆணையர் (பொ), போக்குவரத்துத்துறை விஜயகுமாரசாமி, துணை ஆணையர், போக்குவரத்து (மாநகர காவல் துறை) என்.காமினி, பாரதியார் பல்கலைக் கழகம் பதிவாளர் டாக்டர் பி.திருமாவளவன், தமிழ்ப் பல்கலைக் கழகம் பதிவாளர் டாக்டர் அ.கார்த்திகேயன், கோவை சிறப்புப்பணி அலுவலர் டாக்டர் சு.பிரபாகரன்.
3. பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் மீட்புப் பணிகள் குழு தலைவர்
பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் மீட்புப் பணிகள் குழு தலைவராக கே.எஸ்.ஸ்ரீபதி (தலைமை செயலாளர்), துணை தலைவர்களாக எஸ்.மாலதி (முதன்மை செயலர், உள்துறை), கே.பி.ஜெயின் (காவல்துறை இயக்குனர்), கே.நடராஜ் (இயக்குனர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை) உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒருங்கிணைப்பாளர்கள் - கே.ராதாகிருஷ்ணன் (காவல்துறை கூடுதல் இயக்குனர் சட்டம்-ஒழுங்கு), ஆர்.பால்சாமி (இணை இயக்குனர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை) ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உறுப்பினர்கள் - ஜாபர்சேட், காவல்துறை தலைவர் (நுண்ணறிவு பிரிவு), பிரமோத்குமார் (காவல்துறை தலைவர், மேற்கு மண்டலம்), சிவனாண்டி (கோவை மாநகர காவல்துறை ஆணையர்), டாக்டர் பு.உமாநாத் (மாவட்ட ஆட்சியர், கோவை), பாலநாகதேவி (காவல் துறை துணை தலைவர், கோவை), ஆர்.ஜி.ஜெயகாந்தன் (துணை இயக்குனர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, கோவை மண்டலம்) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
4. ஆய்வரங்க அமைப்பு உதவிக்குழு
தலைவர் - டாக்டர் சி.சுவாமிநாதன் (துணைவேந்தர், பாரதியார் பல்கலைக்கழகம்), துணை தலைவர் - டாக்டர் மன்னர் ஜவகர் (அண்ணா பல்கலைக்கழகம், சென்னை), ஒருங்கிணைப்பாளர்கள் - பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன், சென்னை, டாக்டர் பி.திருமாவளவன், பதிவாளர், பாரதியார் பல்கலைக்கழகம், உறுப்பினர் - டாக்டர் ஆ.கார்த்திகேயன், பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம், ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலா குழுவில் விஜயா தாயன்பன் ஒருங்கிணைப்பாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications