சென்னையில் அரவாணிகளுக்கான மிஸ் இந்தியா' போட்டி - மும்பையின் கரீனா வென்றார்

Subscribe to Oneindia Tamil

Miss India Transgender
சென்னை: இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனம் சார்பில் அரவாணிகளுக்கான மிஸ் இந்தியா' அழகிப் போட்டி சென்னையில் நேற்று நடந்தது.

இதில் தமிழ்நாடு, மராட்டியம், மணிப்பூர், ஆந்திரா, கர்நாடகா உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அரவாணிகள் ஆர்வத்தோடு வந்து கலந்து கொண்டனர்.

உலக அழகிப்போட்டி நடத்தப்படுவதை போல ஆடை அலங்காரம் மற்றும் 'ஃபேஷன் ஷோ'வும் நடத்தப்பட்டது.

விதவிதமான உடை அணிந்து அரவாணிகள் ஓய்யாரமாக நடந்து வந்த காட்சி பார்வையாளர்களை வியக்க வைத்தது. அவர்களிடம் பொது அறிவு, எய்ட்ஸ் பற்றிய வினாக்களும் கேட்கப்பட்டன.

இந்த போட்டியில் மும்பையைச் சேர்ந்த அரவாணி கரீனா சாலினி பட்டம் வென்றார். மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ரோமிக்கு 2ம் இடமும், தமிழகத்தைச் சேர்ந்த பத்மினிக்கு 3ம் இடமும் கிடைத்தன.

அழகிய கூந்தல், நடை, கண், சருமம் ஆகிய பிரிவுகளிலும் பட்டம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு டிவி நடிகைகள் யோகினி, சான்யா, மலைக்கா, ஜெயலட்சுமி, கவிதா லட்சுமி, லாவன்யா, கோலங்கள் ஸ்ரீதர் ஆகியோர் கிரீடம் சூட்டினார்கள்.

இந்திய அளவில் அரவாணிகளுக்காக மிஸ் இந்தியா போட்டி நடத்தப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+