எல்லா மாவட்டங்களிலும் 'முதியோர் கிராமம்'

Subscribe to Oneindia Tamil

Oldage Home
நெல்லை: தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் ரூ. 5 கோடியில் முதியோர் கிராமம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

முதியோர்களை பராமரிப்பதற்காக முதியோர் கிராமம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமி்ட்டுள்ளது. இதற்காக சமூக நலத்துறை மூலம் மாவட்ட வாரியாக முதியோர் கிராமம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ரூ.5 கோடியில் அமைக்கப்படும் முதியோர் கிராமத்திற்கு குறைந்தது 5 ஏக்கர் முதல் 10 ஏக்கர் நிலப்பரப்பு வரை வருவாய்துறையிடம் சமூக நலத்துறை கோரியுள்ளது.

இக்கிராமத்தில் முதியோர்க்கான மருத்துவ வசதி, தியான கூடம், பூங்கா, நூலகம், நடைப்பாதை மைதானம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

மேலும் அவர்களை பரிவுடன் கவனிக்க பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இங்கு வருவாய் அடிப்படையில் கட்டணம் செலுத்தியும், வருவாய இல்லாதவர்களுக்கு இலவசமாகவும் தங்கலாம்.

எனினும் கவனிப்பு, பராமரிப்பில் வித்தியாசம் காட்டப்படமாட்டாது என சமூக நலத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இந்த முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+