மார்கழி மாதம் பிறந்தது-களை கட்டின கோவில்கள்

இந்த சிறப்பு வாய்ந்த, புனிதமான மார்கழி மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் ஆகியவை வருவது மிகச் சிறப்பானது.
மார்கழி மாதத்தில் மக்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, கோவில்களுக்குச் சென்று வணங்கி, வழிபட்டு, திருப்பாவை, திருவெம்பாவை வாசிப்பது வழக்கம்.
ஆண்டாள் எழுதிய திருப்பாவை பாசுரங்கள் மனதுக்கும், உடலுக்கும் புத்தெழுச்சியை அளிப்பதை அனுபவப்பூர்வமாகவே உணர முடியும்.
பல்வேறு தோஷங்கள் நீங்கவும் மார்கழி மாத காலை வழிபாடு உதவும். செல்வச் செழிப்பு அதிகரிக்கும். திருமணத் தடை நீங்கும், குழந்தைப் பேறு கை கூடும்.
சூடிக் கொடுத்த சுடர் கொடியாள் ஆண்டாள் இந்த மார்கழி மாதத்தில்தான் கண்ணனை நினைத்து பாடல்களைப் பாடினாள். அதுதான் திருப்பாவை.
கண்ணனை தனது மணாளனாக ஏற்றுக் கொண்ட ஆண்டாள், மார்கழி மாதங்களில் தன் வயதொத்த இளம்பெண்களை அழைத்துக் கொண்டு, ஸ்ரீகிருஷ்ணனை நினைத்து உருகிப் பாடிய பாடல்களே திருப்பாவை.
அதிகாலையில் குளித்து வாசலில் மாக்கோலமிட்டு, தீபங்கள் ஏற்றி, கோவில்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் மங்கலமான மார்கழி மாதத்தின் முழுப் பலனையும் பெறலாம்.












Click it and Unblock the Notifications