அச்சன்கோவில்: ஆபரண பெட்டிக்கு பக்தர்கள் வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

தென்காசி: அச்சன்கோவில் மண்டல மகோற்சவ விழா தொடங்குவதை முன்னிட்டு நேற்று தென்காசி வந்த ஆபரணப் பெட்டிக்கு பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.

தென்காசியில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ள இந்த அச்சன்கோவில் ஐயப்பனை சபரிமலை செல்லும் பக்தர்கள் தவறாமல் வழிபடுவார்கள். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மகோற்சவ விழா நடைபெறும்.

இந்த ஆண்டு மகோற்சவ தொடங்கியுள்ளது. வருகிற 25ம் தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது. விழா நாட்களில் ஐயப்ப சுவாமிககு பல கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படும். அத்துடன் தங்கத்தால் செய்யப்பட்ட வாள் ஒன்றும் வைக்கப்படும்.

இவை இடங்கிய ஆபரண பெட்டி கேரள மாநிலம் புனலூர் தேவசம் அலுவலக கருவறையில் இருந்து நேற்று எடுத்து வரப்பட்டது. ஆரியங்காவு, செங்கோட்டை வழியாக தென்காசி காசி விஸ்வநாத சாமி கோயில் முன்பு வந்தது. அங்கு ஐயப்ப பக்தர்களும், பொதுமக்களும் திரளாக வந்து வரவேற்பு அளித்து தரிசனம் செய்தனர்.

மண்டல மகோற்சவம் தொடக்கம்:

இந் நிலையில் அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மண்டல மகோற்சவ பூஜை தொடங்கியது.

பிரசித்த பெற்ற ஐயப்பன் கோவில்களில் அச்சன்கோவிலும் ஓன்று. இங்கு ஆண்டுதோறும் மண்டல மகோற்சவ விழா நடைபெறுவது வழககம்.

இன்று காலை 5.30 மணிக்கு ஐயப்பனுக்கு நெய்யாபிஷேகமும், காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் 10 நாள் மண்டல உற்சவ திருவிழா தொடங்கியது. வரும் 25ம் தேதி வரை இத்திருவிழா நடைபெறும்.

இன்று காலை 9-30 மணிக்கு செங்கனூர் சாலமன் மடம் கண்டரூ மோகனாரூ தலைமையில் கொடியேற்றத்துடன் நடைபெற்றது. இதில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆணையர் ராகுல் ஜெயசந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வரும் 21ம் தேதி ஓட்டன்துள்ளல் நிகழ்ச்சியும், 24ம் தேதி கருப்பன் துள்ளல் நிகழ்ச்சியும், இரவு 11.30க்கு பள்ளி வேட்டையும், 25ம் தேதி ஆராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. அச்சன்கோவிலில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+