அருவிகளில் நீர் இல்லை-வெறிச்சோடிய குற்றாலம்
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: சீசன் மந்தமாகி விட்டதால் குற்றாலம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அருவிகளில் மிகக் குறைந்த அளவிலேயே தண்ணீர் கொட்டுவதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
குற்றாலத்தில் தற்போது சீசன் டல்லாகி விட்டது. மலைப் பகுதியில் மழை குறைந்து விட்டதால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து போய் விட்டது.
மிகக் குறைந்த அளவிலேயே தண்ணீர் கொட்டுவதால் வருகிற சுற்றுலாப் பயணிகளை வரிசையில் நிற்க வைத்து குளிக்க அனுமதிக்கிறார்கள்.
ஆனால் சீசன் டல்லாகி விட்டதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.
குற்றாலத்தில் உள்ள பூங்காவில் யாரையும் பார்க்க முடியவில்லை. குரங்குகள்தான் படு சுதந்திரமாக நடமாடி வருகின்றன.
கடைகளும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. சுற்றுலாப் பயணிகளை நம்பி இருக்கும் நடைபாதை வியாபாரிகள் சோர்வடைந்து காணப்படுகின்றனர்.
பயணிகள் வரத்து அடியோடு குறைந்து போய் விட்டதால் குற்றாலத்தில் உள்ள சுற்றுலாத்துறை தகவல் அலுவலகமும் மூடிக் கிடக்கிறது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்













Click it and Unblock the Notifications