சபரிமலையில் பலத்த பாதுகாப்பு - இருமுடி கட்டுகள் ஸ்கேன் மூலம் பரிசோதனை
சபரிமலை: சபரிமலையில் மண்டல பூஜைக்காக நேற்று மாலை நடை திறககப்பட்டது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருமுடிக் கட்டுக்கள் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்படுகின்றன.
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் எதுவும் நேற்று நடைபெறவில்லை.
இன்று அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி ஜி.விஷ்ணு நம்பூதரி கோவில் திறுநடையை திறந்து தீபம் ஏற்றி பூஜையை தொடங்கினார். காலை 4.30 மணி முதல் 7 மணிவரை நெய் அபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து 8 மணி முதல் 12 மணி வரை நெய் அபிஷேகம் நடந்தது. 12 மணிக்கு உச்சகால பூஜை நடந்தது. பகல் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
மாலை 5 மணி்ககு நடை திறக்கப்படுகிறது. 6.30 மணிக்கு அலங்கார தீபாரதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 9.30 மணி்க்கு அத்தாள அபிஷேகம் நடக்கிறது. இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.
இன்று சபரிமலையில் பலத்த மழை கொட்டியது. முதல் நாளான இன்றே பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் குவிந்தனர். சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷத்துடன் பம்பையில் இருந்து மழையில் நனைத்தபடியே மலையேறி சென்றார்கள்.
இந்தாண்டு சபரிமலையில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சந்தேகப்படும்படியான பக்தர்களின் இருமுடிகட்டுகள் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.
சன்னிதானத்தின் வடக்கு வாசல், நடைபந்தல், பாண்டித்தாவளம், பம்பை ஆகிய இடங்களில் ஸ்கேன் கருவிகள் அமைக்கப்படுகிறது.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications