இந்த ஆண்டின் நியூஸ்மேக்கராக ராகுல் காந்தி தேர்வு

யாஹூ இணையதளத்தின் சர்ச் என்ஜினில் அதிகம் தேடப்பட்ட நபராக இந்த ஆண்டில் ராகுல் காந்திதான் இருந்திருக்கிறார்.
இதுகுறித்து யாஹூ இந்தியா நியூஸ் தளத்தின் செய்திக்குறிப்பில், ராகுல் குறித்த சில முக்கிய செய்திகள், இந்த ஆண்டின் மிகப் பெரிய செய்தியாக அமைந்தது. உ.பியில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளித்த ராகுலின் செயல் குறித்த செய்தி, அனைவராலும் வியப்புடன் படிக்கப்பட்டுள்ளது, பார்க்கப்பட்டுள்ளது.
அதேபோல இளைஞர் பட்டாளத்தை காங்கிரஸ் பக்கம் திருப்புவதற்காக அவர் ஓய்வின்றி உழைத்து வருவதாலும் ராகுலின் செல்வாக்கு செய்திகள் மத்தியில் உயர்ந்துள்ளது.
மேலும், மன்மோகன் சிங் அமைச்சரவையில் தனக்கு தேடி வந்த பதவியை அவர் நிராகரித்து கட்சிப் பணிக்காக கடுமையாக பாடுபட்டு வருவதும் அனைவரையும் கவர்ந்துள்ளது.
ராகுல் காந்திக்கு அடுத்த இடத்தில் காத்ரீனா கைப் உள்ளார்.
ராக்கி சாவந்த்துக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. மேலும் ஏ.ஆர். ரஹ்மான், லலித் மோடி ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
குறிப்பிட்ட செய்திக்கு எவ்வளவு க்ளிக்குகள் கிடைத்தது என்பதை அடிப்படையாக வைத்து இந்த ஆண்டின் நியூஸ்மேக்கர் பட்டியல் உருவாக்கப்பட்டதாக யாஹூ நியூஸ் இந்தியா தெரிவித்துள்ளது.
நிகழ்வுகள் வரிசையில், ஓரினச் சேர்க்கையாளர்கள் தொடர்பாக டெல்லி உயர்நீதி்மன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு, மும்பை கடல் பாலம், பன்றிக் காய்ச்சல் தாக்குதல் ஆகியவை அதிகம் படிக்கப்பட்ட செய்திகளாக உள்ளன.
முக்கியஸ்தர்களின் மரணங்கள் பிரிவில் ராஜசேகர ரெட்டியின் மரணம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்து மகாராணி காயத்ரி தேவி, பாப் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன், ஜேட் கூடி, நடுவர் டேவிட் ஷெப்பர்ட் ஆகியோரின் மரணச் செய்திகள் அதிகம் பார்த்து, படிக்கப்பட்டுள்ளன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications