உலக சுற்றுலா தினம்- புதுவையில் கொண்டாட்டம்
புதுச்சேரி: உலக சுற்றுலா தினத்தையொட்டி செப்டம்பர் 27ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு புதுச்சேரி மாநில சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து சுற்றுலாத்துறை இயக்குநர் மாத்யூ சாமுவேல் கூறுகையில், புதுச்சேரி நியூமிஸ்மேட்டிக்ஸ் கழகத்துடன் இணைந்து உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படும்.
செப்டம்பர் 27 மற்றும் 28 ஆகிய இரு தினங்கள் இது கொண்டாடப்படும். இதையொட்டி கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகளை சரியான முறையில் அணுகி அவர்களுக்கு சரியான தகவல்களைத் தருவதற்காகவும், சரியான முறையில் அவர்களை வழிகாட்டுவதற்காகவும் ஆட்டோ டிரைவர்கள், போக்குவரத்து போலீஸாருக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.
அதேபோல இன்டாக் அமைப்புடன் இணைந்து சுற்றுலா கைடுகளுக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
இவை தவிர பல்வேறு கலாச்சார, இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்றார்.


Click it and Unblock the Notifications
