பார்வையற்ற இளைஞருக்கு துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது

Subscribe to Oneindia Tamil

துபாய்: பார்வையற்ற இளைஞருக்கு சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கப்பட்டுள்ளது.

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் நிகழ்ச்சி 14 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இவ்வருடம் நடைபெற்ற விழாவில் அல்ஜீரியாவைச் சேர்ந்த பார்வையற்ற 20 வயது இளைஞர் முஹம்மது இர்ஷாத் மெர்பாய் முதல் பரிசான 250,000 திர்ஹத்தை பெற்றார்.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு,

இரண்டாம் பரிசு: மஸ் ஊத் ரித்வான் (வயது 13) பங்களாதேஷ், 200,000 திர்ஹம்

மூன்றாம் பரிசு : மொஸாப் ஈஸா அலி (வயது 20) பஹ்ரைன் 150,000 திர்ஹம்

நான்காம் பரிசு : அஹ்மத் யூசுரி முஹம்மது (வயது 18) எகிப்து 65,000 திர்ஹம்

ஐந்தாம் பரிசு : காலித் அபூபக்கர் சலீம் (வயது 19) ஏமன் 60,000 திர்ஹம்

ஆறாம் பரிசு : காலித் இப்ராஹிம் அஹ்மத் (வயது 20) லிபியா 55,000 திர்ஹம்

ஏழாம் பரிசு : மப்வானா அஸ்ஸா மப்வானா (வயது 15) தான்சானியா 50,000 திர்ஹம்

எட்டாம் பரிசு : அம்மார் சாலா அல் தீன் (வயது 16) சவுதி அரேபியா 45,000 திர்ஹம்

ஒன்பதாம் பரிசு : நாசர் பதிர் முஹம்மது (வயது 20) குவைத் 40,000 திர்ஹம்

பத்தாம் பரிசு : ( இருவருக்கு தலா 35,000 திர்ஹம் )

முஹம்மது அல் அத்ராஸ் (வயது 16) மொராக்கோ

முஹம்மது ஒத்மான் அப்துல்லாஹ் (வயது 18) சூடான்

இப்போட்டியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 78 பேர் பங்கேற்றனர்.

பத்து இடங்களுக்குப் பின்னர் 80 சதவிகித மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு 30,000 திர்ஹமும், 70 முதல் 79 சதவிகிதம் பெற்றவர்களுக்கு 25,000 திர்ஹமும், 70 சதவிகிதத்திற்கு கீழ் பெற்றவர்களுக்கு 20,000 திர்ஹமும் பரிசாக வழங்கப்பட்டது.

முதல் பரிசு பெற்ற அல்ஜீரியாவைச் சேர்ந்த பார்வையற்ற 20 வயது இளைஞர் முஹம்மது இர்ஷாத் மெர்பாய் கூறுகையில், நான் பிறவியிலேயே கண் பார்வையினை இழந்தவன். ஆனால் திருக்குர்ஆனை மனனம் செய்ய பார்வையின்மை எனக்கு தடையாக இருந்ததில்லை.

டேப், பிரெய்லி குர்ஆன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரது உதவியுடன் திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்ய முடிந்தது. இதுவே நான் பங்கேற்ற முதல் போட்டி. முதல் போட்டியிலேயே இத்தகைய சிறப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. மேலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை திருக்குர்ஆனை மனனம் செய்வதற்கு ஆர்வமூட்ட வேண்டும் என்றார்.

சிறந்த இஸ்லாமிய அறிஞர் விருது :

சூடான் நாட்டின் முன்னாள் அதிபர் அப்துல் ரஹ்மான் சிவார் அல் தஹாப் சிறந்த இஸ்லாமிய அறிஞருக்கான விருதினைப் பெற்றார். இதற்கான பரிசுத் தொகை ஒரு மில்லியன் திர்ஹம் ஆகும்.

சூடான் நாட்டில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய அழைப்பகத்தின் தலைவராக அப்துல் ரஹ்மான் இருந்து வருகிறார். இதுவரை பல்வேறு விருதுகள் பெற்றிருந்தாலும் அனைத்துக்கும் முத்தாய்ப்பாக இவ்விருது அமைந்துள்ளது என்றார்.

இஸ்லாமிய அழைப்பகத்தின் மூலம் 2000க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும், 200க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களும் சூடானில் நிறுவப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தில் சூடானில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்கள் சூடான் நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் இருக்க அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+