நாளை தொடங்கிறது 'சென்னை சங்கமம்'
சென்னை: தமிழ் மையம் மற்றும் தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை இணைந்து நடத்தும் சென்னை சங்கமம்-2010 கலை விழா நாளை தொடங்குகிறது.
16ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கலை விழாவை முதல்வர் கருணாநிதி தீவுத்திடலில் தொடங்கி வைக்கிறார்.
இது குறித்து சென்னை சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளரான கனிமொழி எம்பி கூறுகையில்,
கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தலைப்பு பிரதானமாக இடம்பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் 'சென்னையில் சங்கமம்' தொடக்க விழாவில் இக்கருத்தை வலியுறுத்தும் இசை-நடன-நாடக நிகழ்ச்சி இடம்பெறும்.
நாட்டுப்புறக் கலைகளுடன், சிலம்பம், மல்கம்பர், வாள்வீச்சு, உறியடி, வழுக்குமரம் உள்ளிட்ட தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளும் விழாவில் இடம்பெறவுள்ளன.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் கலந்து கொள்ளகின்றனர்.
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, பல்லாவரம் கன்டோன்மென்ட் பள்ளி வளாகம், கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் அரங்கம், திரு.வி.க. நகர் மாநகராட்சி பள்ளி வளாகம், மெரீனா லேடி வெலிங்டன் கல்லூரி அரங்கம், மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்கா, அண்ணா நகர் போகன்வில்லா பூங்கா, கே.கே.நகர், சிவன் பூங்கா, வளசரவாக்கம் தந்தை பெரியார் அரங்கம், அசோக்நகர் பூங்கா, ராயபுரம் அண்ணா பூங்கா, நுங்கம்பாக்கம் சுதந்திரதின பூங்கா, ஷெனாய்நகர் திரு.வி.க. பூங்கா, பாலவாக்கம் பல்கலை நகர் ஆகிய இடங்களில் இந்த கலை விழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பிரான்ஸ் நாட்டின் சார்பில் ஜனவரி 15ம் தேதி தியாகராய நகர் வெங்கட்நாராயணா சாலையில் செயற்கை விலங்குகள் அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
கேரளம், ஆந்திரம், கர்நாடம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் இருந்தும் கலைஞர்கள் விழாவில் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டைப் போன்று பல்வேறு ஊர்களின் சிறப்பு உணவு வகைகளும் விழாவில் இடம்பெறும்.
ஜனவரி 16ம் தேதி பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நிறைவு விழா நடைபெறும் என்றார் கனிமொழி.












Click it and Unblock the Notifications