ஆயுளை அதிகரிக்கும் காபி: இருதய நோயையும் எதிர்க்கிறது!

காபி குடிப்பதால் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்குமா என்று கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர்.
அந்த விஞ்ஞானிகள் 65 வயது முதல் 100 வயதுக்கு உட்பட்டவர்கள் வரை சுமார் 485 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தினமும் 1 அல்லது 2 கோப்பை காபி கொடுத்துள்ளனர். காபி குடித்த பிறகு அவர்கள் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி ஆராய்ந்தனர்.
காபி குடித்த பிறகு அவர்களின் ரத்த நாளங்களில் ரத்தம் சீராக ஓடியது. இளைஞர்களின் ரத்த ஓட்டம் இயல்பாகவே சீராக இருக்கும். ஆனால் இந்த முதியவர்களின் ரத்த ஓட்டம் காபி குடித்த பிறகு இளைஞர்களின் ரத்த ஓட்டத்தை ஒத்திருந்தது. காபி குடிப்பதால் புற்று நோய் ஏற்படும் என்பதில் உண்மை கிடையாது.
மேலும், தினமும் காபி குடிப்பதால் இருதய நோயை குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் இருதய நோயை எதிர்த்து போராடலாம். காபி குடிப்பவர்களின் ஆயுள் அதிகரிக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.
பேஷ் பேஷ், காபின்னாலே இனி ஹேப்பிதான்!












Click it and Unblock the Notifications