முதுகுளத்தூரில் இஸ்லாமிய பயிற்சி மைய ஆண்டு விழா
முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் இஸ்லாமிய பயிற்சி மைய ஆண்டு விழா நாளை (சனிக்கிழமை) சி.எஸ்.சி. கணினி மைய கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ். சௌக்கத் அலி தலைமை தாங்குகிறார்.
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் எஸ். பஷீர் சேட் ஆலிம் மன்பயீ துவக்கவுரை நிகழ்த்துகிறார்.
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம்
ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பி.கே.என். அப்துல்காதர் ஆலிம், தேரிருவேலி அமீரக ஜமாஅத் நிர்வாகி ஜே.எஸ்.எஸ். அலி பாதுஷா மன்பயீ உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கி சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
முதுகுளத்தூர் முஸ்லிம்கள் வரலாறு குறித்த வரலாற்று தொகுப்பு குறித்து
பொற்கிழி கவிஞர் மு. சண்முகம் உரை நிகழ்த்துகிறார்.
தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர், பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்
தலைவர் ஏ. ஷாஜஹான், திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் ஏ.உமர் ஜஹ்பர் மன்பயீ உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சி மைய முதலவர் ஹெச். ஏ. முஹம்மது
சுல்தான் அலாவுதீன் செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications