மேற்கு தொடர்ச்சி மலையின் அரிய வகை உயிரினங்கள் பற்றிய நூல் வெளியீடு
மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் அரிய வகை தாவரங்கள், விலங்கினங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய நூல் முதன் முதலாக தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்நூல் நாளை வெளியிடப்படுகிறது.
பெங்களூரைச் சேர்ந்த அசோகா சுற்றுச்சூழல் மற்றும் உயிரினங்கள் ஆராய்ச்சி அறக்கட்டளை விஞ்ஞானி கணேசன் நெல்லையில் நிருபர்களிடம் கூறுகையில்,
'நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தாவர வகைகள், விலங்கு இனங்கள் குறித்து, இந்த அமைப்பு ஆய்வு செய்வதோடு, சுற்றுபுற சூழல் விழிப்புணர்வு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.
களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதியில அமைந்துள்ளது.
தொடர்ச்சியான பசுமை மாறாக் காடுகள், புலிகள் சரணாலயம் மற்றும் அரிதான விலங்கினங்கள், தாவர வகைகளை இங்கு காணலாம்.
புலித்தடங்களில் இயற்கை புதையல் என்ற தலைப்பில் தற்போது புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
இப்புத்தகத்தில் புலிகள் மட்டுமல்லாது மற்ற உயிரினங்கள் பற்றியும், மக்களுக்கு தெரியபடுத்தும் வகையில் தமிழ், ஆங்கில மொழிகளில் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கியமான இடங்கள் மற்றும் வெவ்வெறு வனப்பகுதிகளுக்குள் செல்வதற்கான பாதைகள் குறித்தும் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள், தவளைகள், பாம்புகள், தாவர வகைகள் உள்பட பல்வேறு இனங்கள் போட்டோக்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது' என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications