தந்திராஸ், சுட்டி, பாய்தாஜ்.. 5 வகை தீபாவளி!

தமிழ்நாட்டில் தீபாவளியை ஒரு நாள் மட்டுமே கொண்டாடுகிறோம். ஆனால் வட மாநிலங்களில் 5 நாட்கள் கொண்டாடுகிறார்கள். இதை தந்திராஸ், சுட்டி தீபாவளி, பெரிய தீபாவளி, கோவர்த்தன பூஜை, பாய்தாஜ் என 5 வகைகளில் கொண்டாடுகிறார்கள். இந்த 5 தீபாவளிகள் கொண்டாட்டத்துக்கும் பின்னணியில் ஒவ்வொரு கதையும் இருக்கிறது.
1 தந்திராஸ்
மன்னர் ஹமாவின் மகன் தனது 16 வயதில் அதுவும் திருமணமான 4வது நாளில் பாம்பு கடித்து சாவார் என்று ஜோதிடம் கூறியது. அந்த நாளும் வந்தது. எப்படியாவது கணவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த இளவரசனின் புது மனைவி பாம்பு வீட்டுக்குள் வந்து விடாதபடி வீடு முழுவதும் தீபங்களை ஏற்றி வைத்தாள்.
வீட்டு வாசல் மற்றும் அனைத்து பகுதிகளிலும் நகைகள், பொற்காசுகள், வெள்ளி காசுகளை கொட்டி வைத்தாள். இவற்றில் தீபத்தின் ஒளிபட்டு பிரதிபலித்து வீடே பிரகாசித்தது. இரவில் கணவர் தூங்கி விடாதபடி மனைவி பாட்டு பாடி கொண்டிருந்தார்.
குறிப்பிட்ட நேரத்தில் எமன் பாம்பு வேடத்தில் உள்ளே வந்தான். அங்கு இருந்த பிரகாசமான ஒளியால் பாம்பின் கண்கள் குருடாகி விட்டது. இளவரசர் இருந்த இடத்துக்கு செல்ல முடியவில்லை. நகைகளின் உச்சியில் ஏறி அமர்ந்த பாம்பு இளவரசி பாடிய பாடல்களை மெய்மறந்து கேட்டுக் கொண்டே இருந்தது. அதற்குள் விடிந்து விட்டது. 4வது நாள் முடிந்து விட்டதால் பாம்பு அங்கிருந்து சென்று விட்டது.
இளவரசியின் தந்திரத்தால் கணவர் உயிர் காப்பாற்றப் பட்டதால் அந்த நாளை தந்திராஸ் என கொண்டாடுகிறார்ர்கள். இந்த விழா தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு நடக்கும் அன்று பெண்கள் வீடுகள் முழுவதையும் அலங்கரித்து, விள்கு ஏற்றி கொண்டாடுவார்கள்.
2.சுட்டி தீபாவளி
இது தீபாவளிக்கு முந்தைய நாள் கொண்டாடப்படுகிறது. இதற்கும் ஒரு கதை இருக்கிறது. நரகாசுரன் என்ற அரக்கன் இந்திரனை வென்று அவன் ராஜ்ஜியத்தை கைப்பற்றி கொண்டான் 16 ஆயிரம் பெண்களையும் சிறைப்பிடித்தான்.
பெண் கடவுள் அதிசியின் மந்திர சக்தி கொண்ட கம்மலையும் எடுத்து சென்று விட்டான். இதை அறிந்த கிருஷ்ணர் நககாசுரனிடம் போரிட்டு அவனை கொன்று 16 ஆயிரம் பெண்களையும் விடுவித்தார். மந்திர சக்தி கம்மலையும் மீட்டார். அந்த நாளையே சுட்டி தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.
அன்று அதிகாலையே வீட்டை அலங்கரித்து வீட்டு முன்பு கோலமிடுகிறார்கள். பட்டாசுகளும், வெடிக்கின்றனர். இரவில் பாட்டு பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
3 பெரிய தீபாவளி
இதுதான் தீபாவளி நாளாகும். இதை பெரிய தீபாவளியாக கொண்டாடுகின்றனர். இதை லட்லட்சுமி பூஜை என்றும் அழைக்கின்றனர். 14 ஆண்டுகள் காட்டுக்கு சென்ற ராமர் இந்த நாளில்தான் வனவாசம் முடிந்து வீடு திரும்பினார். எனவே அதை பெரிய தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.
அதேபோல செல்வத்துக்கு கடவுளான லட்சுமி வீட்டுக்கு வந்து நேரடியாக அருள் புரிவார் என்ற நம்பிக்கையும் உள்ளது. யார் வீடு சுத்தமாக இருக்கிறதோ அவர் வீட்டுக்குத்தான் லட்சுமி வருவாராம். எனவே அன்று வீட்டை நன்றாக சுத்தப்படுத்தி அஅலங்கரித்து லட்சுமி பூஜை செய்வார்கள்.
4. கோவர்த்தன பூஜை
தீபாவளிக்கு மறுநாள் இந்த விழா கொண்டாடப்படுகிறது. கோகுலத்தை சேர்ந்த மக்கள் இநதிரனை வழிபட்டு வந்தனர். கிருஷ்ணருக்கு பிடிக்கவில்லை. இந்திரனை விட நான் சக்தி கொண்டவன் என்பதை நிரூபிக்க தனது சுண்டு விரலால் கோவர்த்தன மலையை தாக்கி மக்களுக்கு குடையாக பிடித்தார். இந்த நாளில்தான் அந்த சம்பவம் நடந்தது.
எனவே இந்த கோவர்த்தன பூஜை நடத்துகிறார்கள். அன்று வீட்டிலேயே மலை போன்று வடிவங்களை அமைத்து அலங்கரித்து அதில் வழிபாடு நடத்துகிறார்கள்.
5. பாய்தாஜ்
திருமணமான சகோதரிகள் வீட்டுக்கு சகோதரர்கள் இனிப்பு பண்டங்கள் மற்றும் பரிசு பொட்களுடன் செல்லும விழாவாக கொண்டாடப்படுகிறது. அதாவது சகோதர-சகோதரி ஒன்றுமை விழாவாக இதை கொண்டாடுகின்றனர்.
நரகாசுரனை கொன்று விட்ட மகிச்சியில் இருக்கும் கிருஷ்ணர் தனது சகோதரி சுபத்ரா வீட்டுக்கு சென்றார். அவரை சுபத்ரா வெற்றி திலகமிட்டுவரவேற்றார். இந்த நாளை பாப்தாஜ் விழாவாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில்தான் சைன மத கடவுள் மகாவீர் நிர்வாண நிலைக்கு சென்றாராம். எனவே சைன மதத்தினரும் விழா கொண்டாடுகிறார்கள்.
தீபாவளியை குதூகலமாய் கொண்டாடுங்கள்!![]()
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications