தமிழகத்தில் 1.84 லட்சம் பேருக்கு எய்ட்ஸ்: விழிப்புணர்வுக்கு இளவட்ட விழா

இது தொடர்பாக நெல்லை கலெக்டர் ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது,
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்டப்படி 2012க்குள் எய்ட்ஸை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1.84 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல், திருச்சி, சேலம் மாவட்டங்களில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 257 பேருக்கு எய்ட்ஸ் தாக்குதல் உள்ளது. அம்பை, நாங்குநேரி, சங்கரன்கோவில், தென்காசி ஆகிய பகுதிகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 3 மாதங்களில் நெல்லை மாவட்டத்தில் 190 பேருக்கு எச்.ஐ.வி. இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 50 பேர் நகர் புறத்தையும், 100 பேர் கிராம புறத்தையும் சேர்ந்தவர்கள்.
கிராமப்புற பகுதிகளில்தான் எய்ட்ஸ் அதிகம் பரவுகிறது. கூலி தொழிலாளர்கள் தான் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 வயது முதல் 24 வயதுகுட்பட்ட இளைஞர்களுக்கு எய்ட்ஸ் அதிகம் பரவுகிறது. எனவே இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கமும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி நடத்துகிறது.
நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் விழாவில் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் விளையாட்டு துறை அமைச்சர் மைதீன்கான் போட்டிகளை துவக்கி வைக்கிறார்.
இதில் 32 கல்லூரிகளை சேர்ந்த 1500 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். பின்னர் சென்னையி்ல் இளவட்டம் என்ற பெயரில் வரும் 10, 11,12 ஆகிய தேதிகளில் இளைஞர் திருவிழா நடக்கிறது. இதில் 1.50 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கிறார்கள்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications