தாமிரபரணியில் மணல் அள்ள உயர் நீதிமன்றம் தடை-நல்லகண்ணு வரவேற்பு
நெல்லை: தாமிரபரணியில் 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ளக் கூடாது என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாக இந்திய கம்யூனிஸ்ட் தேசிய கட்டுபாட்டு குழுத் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ளத் தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. மணல் அள்ளுவதை கண்காணிக்க உயர் நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 4 மண்டலங்களிலும் குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது. இதுவும் வரவேற்கதக்கது.
தீர்ப்பை அமுல்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றத் தவறினால் தொடர்ந்து நாங்கள் இயக்கங்கள் நடத்துவோம்.
குவாரி நடந்த இடங்களில் பள்ளங்களை மூடவும், மணல் எடுத்துச் செல்ல போடப்பட்ட சாலைகளை அகற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அவ்விடங்களில் தற்காலிக தீர்வு கிடைத்துள்ளது.
வீடு கட்ட மணல் தேவை என சிலர் தெரிவிக்கின்றனர். நீதிமன்றத் தீர்ப்புப் படி இனி அதற்கான அனுமதியை கலெக்டர்களும், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவும் ஆய்வு செய்து வழங்குவர். தடை விதிக்கப்பட்டதால் மணல் விலை ஏறி வருகிறது என்பதை ஏற்க முடியாது. அப்படியானால் சிமெண்ட் விலை கூட தான் இருமடங்கு ஏறி விட்டது. வெளி மாநிலங்களுக்கு ஆற்று மணலை கொண்டு செல்லக் கூடாது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications