குண்டாறு அணை பூங்காவில் ஆபாச பெண் சிலை - முகம் சுளிக்கும் சுற்றுலா பயணிகள்
திருநெல்வேலி மாவட்டம் என்றாலே அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு நீர்த்தேக்கம், கரையாறு, முண்டந்துறை, களக்காடு, கிருஷ்ணாபுரம், நெல்லையப்பர் கோவில், கூந்தன்குளம், குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றால அருவி, ஏராளமான சுற்றுலா பகுதிகள் உள்ளன. இதில் ஓன்று செங்கோட்டை அருகேயுள்ள கண்ணுபுளிமெட்டு குண்டாறு நீர்த்தேக்கம்.
இந்த பகுதி 1998ம் ஆண்டு தமிழக சுற்றுலா தலத்தின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வர முயற்சிகள் நடந்தன. ஆனால் அதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சுமார் 25 லட்சம் ரூபாய் செலவில் அழகான பூங்கா ஒன்றை அமைத்தது.
பொதுப்பணித்துறை கட்டுபாட்டிலுள்ள இப்பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பரளவில் பூங்கா அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. சில ஆண்டு வரை செயல்பட்ட பூங்கா பின் பராமரிப்பின்றி பாழடைந்த நிலைக்கு தள்ளப்பட்டு தற்போது அரசு நிதி மூலம் புணரமைப்பு பணி நடந்து வருகிறது. ஆண்டுதோறும் குற்றால சீசனுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான உல்லாச பயணிகள் இப்பகுதிக்கு வருவதால் வருமானத்தை ஈட்டும் வகையில் இப்பகுதி புணரமைக்கப்படுகிறது.
இந்த குண்டாறு நீர்த்தேக்க சிறுவர் பூங்காவில் யானை, டைனோசர் உள்ளிட்ட பல்வேறு உருவ பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று சிப்பிக்குள் தாயும், சேயும் இருப்பது போன்று கலைநயத்தோடு அமைக்கப்பட்ட சிலை.
இச்சிலையை தற்போது மிகவும் ஆபாசத்தோடு வர்ணம் பூசியுள்ளதால் முக்கால் அளவு நிர்வணத்தோடு அப்பெண் தன் குழந்தையோடு படுத்திருப்பது போன்று உள்ளது. இதனை குழந்தைகளோடு சென்று பார்வையிடும் பொதுமக்கள், உல்லாச பயணிகள் கலை நயம் இருந்தாலும் முகம் சுளிக்கும் விதமாக இருப்பதாக கூறுகின்றனர்.
சிறுவர் பூங்காவில் சிந்தை மயக்கும் சிற்பம் மீது பூசப்பட்ட வர்ணம் சீரமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!













Click it and Unblock the Notifications